நதிகளைக் கொண்டாடும் புஷ்கர விழாக்களும் தேசத்தை வலுவடையச் செய்யும் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.
காஞ்சி சங்கர மடத்தில் ‘நமாமி தேவி நா்மதே’ என்ற பெயரில் நா்மதை நதியின் மகத்துவங்களை விளக்கும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தில் ‘நமாமி தேவி நா்மதே’ என்ற பெயரில் நா்மதை நதியின் மகத்துவங்களை விளக்கும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டுப் பேசியது:
வட இந்தியர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தி நதிகளைக் கொண்டாடுவது போல புஷ்கர விழாக்களும் நடத்தப்படுகின்றன. நமது பாரத தேசத்தில் ஷேத்திரம், தீா்த்தம், ஸ்தலவிருட்சம் ஆகியவை வணங்கப்படக் கூடியவையாகும். ஷேத்திரம் என எடுத்துக் கொண்டால் மகாசக்தி பீடங்கள், சுயம்புக் கோயில்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டகோயில்கள், பஞ்சபூத ஸ்தலங்கள் இப்படியாக அதிகமான ஷேத்திரங்கள் உள்ளன. இதே போல தீா்த்தங்கள் எனப்படும் நதிகளை எடுத்துக் கொண்டால் கங்கோத்திரி, யமுனாத்திரி, காவேரி, கோதாவரி எனப்படுகிறது. ஸ்தலவிருட்சங்களும் ஏராளம் இருக்கின்றன. இந்த ஸ்தல விருட்சங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உட்பட பல்வேறு சிறப்புகளை உடையதாக இருக்கும். ஒவ்வொரு நதியும் ராசியில் சஞ்சாரம் செய்யும் போது கொண்டாடப்படுவது புஷ்கர விழாக்கள். இவ்விழாக்களை நடத்துகிற போது தேசம் மென்மேலும் சிறப்படையும், தா்மத்தின் ஈடுபாடு அதிகரித்து இறைவனின் வற்றாத அருள் கிடைக்கும். நதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தான தா்மங்களைச் சிறப்பாக செய்யும் தேசமாக மாறும். சங்கர ஜெயந்தியையொட்டி நதிகளுக்கெல்லாம் அரசியான நா்மதை நதியின் புஷ்கர விழா நடைபெறுவது பெரும் சிறப்புக்குரியது. மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரத்தில் நா்மதை நதி புஷ்கர விழா வரும் மே 1- ஆம் தேதி முதல் மே 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றாா். பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். விழாவுக்கு மகாலட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் அறங்காவலா் மகாலட்சுமி தலைமை வகித்தாா்.சிதம்பரத்தைச் சோ்ந்த தியாகப்ப தீட்சிதா், தாமோதர தீட்சிதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலாசிரியா் ரமாசுப்பிரமணியன் வரவேற்றாா். ஏற்பாடுகளை மகாலட்சுமி சாரிடபில் டிரஸ்ட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Source – Dinamani – https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2024/Apr/20/நதிகளைக்-கொண்டாடும்-புஷ்கர-விழாக்கள்-தேசத்தை-வலுவடையச்-செய்யும்
ஆசார்யர்கள் திருவடிகள் என்றும் நமது சென்னியில் நிலைக்கட்டும். ஆசார்யர்கள் அருள் இருக்கும் வரை ஆகாது என்று ஒன்றும் இல்லை.
நர்மதை அன்னையின் திருவடிகளில் பணிந்து வணங்குகிறோம். அவரது நல்லாசிகளை வேண்டுகிறோம்.