ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 65ஆவது ஆசார்யர்களாக அமர்ந்து அருளாட்சி செய்தவர்கள் பூஜ்யஸ்ரீ ஸுதர்சன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஆவர்.
நாடெங்கும் விஜயம் செய்து நான்மறையாளர்க்கும், கலைஞர்களுக்கும், வறியவர்க்கும் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானத்திலிருந்து பெருமளவு பொருளை வாரி வழங்குவதில் பேருவகை கொண்டிருந்த இவர்களுடைய கொடைத்திறம் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது.
பூஜ்யஸ்ரீ இளையாற்றங்குடி பெரியவாள் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் இவர்களது ஸேது யாத்திரை சமயத்தில் ராமேச்வரத்தில் மிகப் பெரிய இரண்டு அண்டாக்களில் பாதகாணிக்கையாக ஸமர்ப்பிக்கப்பட்ட பெரும் பொருளை நிரப்பி வைக்கும்படி ஆஜ்ஞையிட்டதும், அவற்றின் நடுவில் இருந்து தமது திருக்கரங்களால் ஆங்கு வருகை தந்திருந்த மஹாவித்வான்கள், உள்ளூர் மஹாஜனங்கள், கலைஞர்கள், அன்பர்கள் உள்ளிட்ட யாவருக்கும் அந்த திரவியங்கள் முழுவதையும் வாரி வழங்கிய பூஜ்யஸ்ரீ ஜகத்குருநாதர்களின் அருஞ்செயலைப் போற்றி நினைவுகூறும் பழைய ஆங்கில ஆவணத்தின் ஒரு பகுதி இது
Poojyasree Sudarsana Mahadevendra Saraswati Sankaracharya Swami was the 65th Shankaracharya of the Sri Kanchi Kamkoti Peetham.