Loading...
Published in the year 1988 by Kumbakonam Sri Kamakoti Research Centre
Leave a reply
This will serve as a repository helpful especially for the younger generation..
Do share any articles, photos, audios & videos, news articles for inclusion in this Archival collection. You can login and post this or email it to kanchiarchives@gmail.com
All
நேபாளமும் காஞ்சி
ஶ்ரீகாமகோடி பீடமும்
இந்த புத்தகத்தின் பக்கங்கள் குறைந்து இருந்தாலும், “கல்வியிற் கரையிலாக் காஞ்சி மாநகரின்” ஆன்மீக முக்கியத்துவத்தை சுருக்கமாக கூறுகிறது என்றால் மிகையாகாது.
ஆதிசங்கரரின் ஆன்மீகப்பணியும், அதற்கு காஞ்சி மாநகரம் ஆன்மீக மையமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
காஞ்சி, ஶ்ரீ காமகோடி பீடம் எவ்வாறு, நேபாளம் மற்றும் காஷ்மீரை ஆன்மீகத்தின் மூலம் ஒன்றிணைத்து, காஞ்சியை வெறும் மோக்ஷ புரியாக மட்டும் பாராமல், ஆன்மீக பாலமாக நம்மை பார்க்க வைக்கிறது.
புதுப் பெரியவா அவர்கள் நேபாள யாத்திரை செய்து, ஆதி சங்கரரின் வழியில் நடந்து , நேபாள ,இந்தியாவின் ஆன்மீகப் பாலத்தை மிக நன்றாக மீண்டும் இணைத்தது தெரிய முடிகிறது.
காஷ்மீர் இன்றும் மடத்தின் ஆன்மீகப் பாலமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும், காஷ்மீரில் ஆதி சங்கரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நேபாளம், காஷ்மீர் இரண்டும் வெகு தூரம் காஞ்சியில் இருந்து இருந்தாலும், ஆன்மீகம் எப்படி ஒன்றிணைக்கும் என்பதற்கு ஒரு சான்று.
கும்பகோணத்தில் மடத்தின் அருகே இருக்கும் ஶ்ரீ பகவத் பாதர் படித்துறை எப்படி உருவாகியது என்று படிக்கும் போது, அந்தப் படித்துறை, எத்தனை முக்கியமானது, எவ்வளவு சரித்திர முக்கியத்துவம் பெற்றது என்று இந்த புத்தகத்தை படிக்கும் போது, அறிய முடிகிறது.
41 வது பீடாதிபதி கங்காதரேந்திரர் கண் பார்வை இழந்த காஷ்மீர் மன்னனுக்கு, கண் பார்வை அளித்தார் என்று நினைக்கும் போது, காஞ்சியும் , காஞ்சி மடமும் நெடுங்காலமாக ஆன்மீக ஒற்றுமைக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் எவ்வாறு சேவை செய்து வருகிறது என்று தெரிய முடிகிறது.
ஶ்ரீ சங்கரர் வ்ருசதேவ வர்மன் அரசன் காலத்தில் நேபாள் விஜயம் செய்தார் போன்ற சரித்திர உண்மைகள் தெரிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்த சிறிய புத்தகம், பெரிய உண்மையை, சரித்திர நிகழ்வுகளை நமக்கு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, காஞ்சி, நேபாள், காஷ்மீர் மூன்றும் ஒரு ஆன்மீக முக்கோணமாக விளங்கியது. அதன் நடுவில் இருப்பது காஞ்சி மடமும், அதன் ஆச்சாரியர்களும் என்று கூறித் தெரியவெண்டும்.