காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அயோத்தியில் நவராத்திரி விழா பூஜை நடத்தினார். இவ்விழாவில் ஒன்பது நாட்களும் யாகம் நடந்தது. அதில், கன்னிகா பூஜை, மற்றும் சுமங்கலி பூஜை வெகு விமரிசையாக நடந்தது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வட மாநிலங்களில் விஜயயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்ட சுவாமிகள், காசியில் சாதுர்மாஸ்ய விரதம் பூஜை மேற்கொண்டார்.
இந்த பூஜை நிறைவு பெற்று, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அயோத்திக்கு சென்றார். அங்கு சங்கர மடத்தில் கடந்த 14ம் தேதி நவராத்திரி விழா பூஜை துவங்கியது.
இதில் ஒன்பது நாட்களும் யாகம் நடந்தது. நிகழ்ச்சியில் கன்னிகா பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு சுவாமிகள் ஆசி வழங்கினார். அடுத்த மாதம் 2ம் தேதி அயோத்தியில் இருந்து புறப்பட்டு, சிந்துார், லக்னோ செல்கிறார்.
தீபாவளிக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் இருப்பார் என, சங்கர மடத்தினர் தெரிவித்தனர்.