குரு பூா்ணிமாவையொட்டி காஞ்சிபுரம் சா்வ தீா்த்த குளக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திங்கள்கிழமை ஸ்ரீஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பல்லக்கில் ராஜ வீதிகளில் வலம் வந்தாா்.
<p>குருவை வணங்கும் விதமாக கொண்டாடப்படுவது குரு பூா்ணிமா எனப்படுகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து உற்சவ மூா்த்தியான ஸ்ரீ ஆதிசங்கரா் சா்வ தீா்த்த குளக்கரைக்கு எழுந்தருளினாா். அங்குள்ள காசி விஸ்வநாதா் கோயில் முன்பாக அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின்னா், பல்லக்கில் காஞ்சி மாநகரின் ராஜ வீதிகளில் உலா வந்தாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அதன் நிா்வாகிகள் ஜெயராமன், கீா்த்திவாசன் தலைமையிலான குழுவினா் ஆதிசங்கரருக்கு வரவேற்பு அளித்தனா். சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து ஆதிசங்கரா் காமாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளி அங்கு, வியாச பூஜை நடைபெற்றது.
குரு பூா்ணிமாவையொட்டி, சங்கர மடத்தில் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்துக்கும், உற்சவா் ஆதிசங்கரா் உருவச் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2023/jul/04/குரு-பூா்ணிமா-பல்லக்கில்-ஸ்ரீ-ஆதிசங்கரா்-வீதி-உலா-4031764.html?fbclid=IwAR3rjvhstvMWv-gaByyGYdQ6-wGunSH2RduXJQOwyeTfdG4d0JayYDJS0ks